Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

“நீதி கிடைக்க வேண்டும்” – இளைஞரை கொன்ற பிரபல நடிகர் அதிரடி கைது? கண்ணீருடன் நீதி கேட்கும் இளைஞரின் மனைவி!

இந்தியா

“நீதி கிடைக்க வேண்டும்” – இளைஞரை கொன்ற பிரபல நடிகர் அதிரடி கைது? கண்ணீருடன் நீதி கேட்கும் இளைஞரின் மனைவி!

கர்நாடக சினிமா துறையில் நடிகராக பணியாற்றி வருபவர் தர்ஷன். இவர், ரேணுகா ஸ்வாமி என்ற 33 வயது நபரை கொலை செய்த குற்றத்திற்காக, கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ரேணுகா ஸ்வாமியின் மனைவி சஹானா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், “ஒரு வருடத்திற்கு முன்புதான் நாங்கள் திருமணம் செய்துக் கொண்டோம். கர்ப்பமாக இருக்கும் நான், என் குழந்தையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறேன். இந்த சூழ்நிலையில் என்னுடைய கணவரின் இறப்பு, என்னை நொறுக்கிவிட்டது. வாழ்க்கையில் என்னால் எப்படி முன்னோக்கி செல்ல முடியும்” என்று கண்ணீருடன் கூறினார்.

மேலும், “என்னுடைய கணவர் இழிவை ஏற்படுத்தும் வகையிலான கமெண்ட்ஸை, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தால், அவர் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்காக, அவரை ஏன் கொலை செய்திருக்கணும்” என்று கூறி, கதறி அழுதார்.

தொடர்ந்து பேசிய அவர், “தர்ஷன் நடிகராக இருந்தாலும், பெரிய ஸ்டராக இருந்தாலும், எனக்கு நீதி வேண்டும்” என்று அதிரடியாக வலியுறுத்தினார்.

எதற்காக கொலை நடந்தது?

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரேணுகா ஸ்வாமி அப்பல்லோ மருந்தகத்தில், பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர் தர்ஷனின் காதலியும் உடன் நடித்த நடிகையுமான பவித்ரா கௌடா குறித்து, ஆபாசமான முறையில், இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு வெளியானதையடுத்து, திடீரென ரேணுகா ஸ்வாமி காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், தர்ஷன், அவரது காதலி பவித்ரா கௌடா மற்றும் 10 பேர், இந்த வழக்கில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

More in இந்தியா

To Top