2-வது முறையாக குறைந்த ரெப்போ வட்டி விகிதம்!

வங்கிகளில் பொதுமக்கள் கடன்களை பெறுவதை போல, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன்களை பெறுகின்றன. இந்த கடன்களுக்கான வட்டி விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த வட்டி விகிதம் குறையும் போது, வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கும் வட்டி விகிதமும் குறையும். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம், இன்று ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம், 6.0 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதமும், ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News