குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரியில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக அந்த பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த பொதுமக்கள் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் வேலு, சப் இன்ஸ்பெக்டர் அந்தோனி சகாயபாரத் தலைமையில் விரைந்து வந்த போலீசார் ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டபோது அதிர்ச்சியில் உறைந்து போயினர் அதில் தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் இல்லாத நிலையில் உடலில் கல்லை வைத்து கட்டப்பட்ட நிலையில் சடலம் இருந்தது போலீசை அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
இதையடுத்து அந்த சடலத்தை மீட்டு அங்கிருந்த நபர்கள் உதவியுடன் போலீசார் கொலை செய்யப்பட்ட நபரின் தலை மற்றும் கால்கள் உள்ளதா என தேடிய நிலையில் ஏரிக்கரையின் ஓரத்திலேயே கொலை செய்யப்பட்ட நபரின் ஒரு காலை மட்டும் போலீசார் கண்டெடுத்தனர்.
மேலும் அந்த பகுதியில் தலை மற்றும் கைகள் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். கொலை செய்யபட்ட நபருக்கு சுமார் 30 வயதுடைய ஆண் என்பதும் கத்தியால் வயிற்றில் குத்திய நிலையில் குடல் சரிந்து தலை, கைகள், கால்கள் ஆகியவற்றை வெட்டி எடுத்து விட்டு உடலில் கல்லை கட்டி ஏரியில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கொலை இந்த பகுதியில் நடந்ததா அல்லது வேறு எங்கும் கொலை செய்துவிட்டு உடலை இங்கு கொண்டு வந்து போட்டு விட்டு சென்றார்களா என்பது குறித்தும் உடல் அழுகி நோயில் மீட்டெடுக்கப்பட்டு இருப்பதால் கொலை சம்பவம் நடந்து இரண்டு முதல் நாட்கள் ஆகியிருக்கும் எனவும் எனவே இந்த நான்கு நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காணாமல் போனவர்கள் குறித்து போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நபரின் தலை, கால்கள் மற்றும் கைகள் இந்த பகுதியில் உள்ளதா என தீவிரமாக தேடி வருகின்றனர். தலை, கை, கால்கள் இல்லாமல் கொலை செய்யப்பட்ட நபர் கல்லை கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.