சுரங்க தொழிலாளர்கள் மீட்பு – நலம் விசாரித்த பிரதமர் மோடி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி – யமுனோத்ரி இடையே சார்தாம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சில்க்யாரா – தண்டல்கான் இடையே சுமார் 4.5 கி.மீட்டர் தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த சுரங்க பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி அதிகாலை சுரங்கத்தின் முகப்பில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பாறைகள் இடிந்து விழுந்ததில் சுரங்கத்திற்குள் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். இதனால், தொழிலாளர்களை மீட்க மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இரவு பகல் பாராமல் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 17 நாட்கள் நடைபெற்ற இந்த போராட்டம் நேற்று இரவு முடிவுக்கு வந்தது. 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனை பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் மீட்பு குழுவினர் கொண்டாடினர்.

இந்த நிலையில், மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசி அவர்களிடம் நலம் விசாரித்தார்.

RELATED ARTICLES

Recent News