நீர்தேக்க தொட்டி மழைநீர் சேகரிப்பு

கும்பகோணம் அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டி மழைநீர் சேகரிப்பு குறித்த இருந்த தகவல் பலகை சரிந்து விழுந்ததில் 12-வயது சிறுவன் படுகாயமடைந்தான்.

கும்பகோணம் திருவிடைமருதூர் அடுத்த ஏனாநல்லூர் ஊராட்சிகுப்பட்ட தண்டாளம் மணவெளித்தெருவில் வசிக்கும் மாரியப்பன்-அனுசியா தம்பதியினரின் மகன் தர்ஷன் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது வீட்டிற்கு அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் மழைநீர் சேகரிப்பதற்கான நான்கரை அடியில் சிறியளவிலான தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் சிமெண்ட் சுவரில் தகவல் பலகையும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அந்த தகவல் பலகை சரிந்து விழுந்துததில், அதன் அருகே விளையாடிக் கொண்டிருந்த தர்ஷன் படுகாயமடைந்தான். இதையடுத்து, சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.