விஷ்ணு விஷால், சூரி, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த திரைப்படத்தில், புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை புஷ்பா பசுபுலேட்டி.
இவர் தற்போது, பல்வேறு சீரியல்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில், புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து, நடிகை ரேஷ்மா தற்போது பேசியுள்ளார்.
அதாவது, “முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மறுத்தேன். ஆனால், கவர்ச்சியாக எந்தவொரு காட்சியும் இல்லை என்று இயக்குநர் கூறினார். அதன்பிறகு தான், நடித்தேன். ஆனால், இந்த கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.