சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதிக்குட்பட்ட யானைகுளம் பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களின் சீட்டுக்கள் கிழிக்கபட்டிருந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஒன்று முதல் ஆறாவது தெருவில் உள்ள இருசக்கர வாகனங்களின் சீட்டுக்களை அந்த நபர் பிளேடால் கிழித்துள்ளார் என்பது தெரிய வந்தது.
மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை மேற்கொண்ட போது 35வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்குத்தானே பேசிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் சீட்டுகளை பிளேடால் கிழித்தது பதிவாகியிருந்தது. இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம நபரை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.