சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து உரையாற்றினார். அப்போது “இதயமுள்ளவர்கள் யாருக்கும் இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. சட்ட ஒழுங்கை பேணுவதும்,மக்களை பாதுகாப்பதும், மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை. மாநில எல்லைக்குள்ள மக்கள் அனைவரையும் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. ஆன்லைன் சூதாட்ட அநியாயம் தொடராமல் இருக்க, இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்ததால் ஒருமனதாக மசோதா நிறைவேறியது.