ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து புதிய மாநிலமாக உருவான தெலங்கானா மாநிலத்தின் 3-வது சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி காணப்பட்டது.
இறுதியில் 119 சட்டப்பேரவை தொகுதிகளில் 64 தொகுதிகள் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், ஐதராபாதில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், ரேவந்த் ரெட்டி, கட்சியின் சட்டசபை தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தெலுங்கானாவின் முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, இன்று பதவியேற்கவுள்ளார்.