திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா காவேரியம்மாபட்டியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பாண்டியன். அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரது தந்தை வேலுச்சாமிக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கு சான்றிதழ் வழங்க வருவாய் ஆய்வாளர் பாண்டியன் ரூபாய் 8000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதையடுத்து காவேரியம்மாபட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் மாரிமுத்துவிடம் லஞ்சம் ஒழிப்பு காவல்துறையினர் ரசாயணம் தடவிய ரூ.8,000 பணத்தை கொடுத்து வருவாய் ஆய்வாளரிடம் கொடுக்க சொல்லி உள்ளனர்.
அதை வாங்கிய மாரிமுத்து ஒட்டன்சத்திரம் தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பின்னால் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று ஆய்வாளர் பாண்டியனிடம் ரசாயணம் தடவிய ரூ.8, ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார்.
அப்போது தயாராக காத்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான போலீசார் வருவாய் ஆய்வாளர் பாண்டியனை கைது செய்து திண்டுக்கல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.