உலக மல்யுத் போட்டியின் பிரபலமான வீரர்களில் ஒருவர் ரே மிஸ்டீரியோ. 90-ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பரிட்சயமான இவர், மாஸ்கை அணிந்துக் கொண்டு, பறந்து பறந்து சண்டையிடுவதில் வல்லவர்.
தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட ரே மிஸ்டீரியோ, கடந்த 2009-ஆம் ஆண்டு அன்று, மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், 66 வயதாகும் இவர், திடீரென உயிரிழந்துவிட்டதாக, இணையத்தில் செய்தி வெளியாகி, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள், தங்களது இரங்கல்களையும், சோகத்தையும், இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.