ஹரியாணா மாநிலத்தில் கலவரம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்வு!

ஹரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ என்ற பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் – ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அந்தப் பகுதியில் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து இரு தரப்பும் மோதிக் கொள்ள கலவரம் மூண்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு குவிந்தனர். கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போதும் கலவரம் அடங்காததால் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.

வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். பின்னர் கலவரக்காரர்களை நோக்கியும் போலீஸார் சுட்டனர். அரசாங்கம், தனியார் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.

பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு ஃபரிதாபாத் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் ஆகியனவற்றிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News