தடுப்புச் சுவரில் மோதி விபத்து.. கொழுந்துவிட்டு எரிந்த கார்.. சீரியஸ் கண்டிஷனில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்..

இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் ரிஷப் பண்ட். விக்கெட் கீப்பராக இருந்து வரும் இவர், இன்று காலை 5.30 மணி அளவில், டெல்லி-டேராடுன் நெடுஞ்சாலையில், காரில் வேகமாக சென்றுள்ளார்.

ரோர்கி எல்லை அருகே கார் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தடுப்புச் சுவரில் வேகமாக மோதியதால், காரில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.

இதில் பலத்த காயம் அடைந்த ரிஷப் பண்ட், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த அம்மாநில அரசு, அவரது சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும், அவரது உடல்நலம் விரைவில் சரியாக வேண்டும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.