கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரிது வர்மா. இந்த படத்திற்கு பிறகு, நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை ரிது வர்மா, பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உப்பென்னா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் வைஷ்ணவ் தேஜ்.
இவரும், நடிகை ரிது வர்மாவும், காதலித்து வருகிறார்களாம். நண்பர்களின் விருந்துகளில் கலந்துக் கொண்டபோது, இருவரும் நண்பர்களாக மாறி, தற்போது காதலித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவும், இருவரும் முடிவு செய்துள்ளார்களாம். நடிகர் தேஜ் வைஷ்ணவ், நடிகை ரிது வர்மாவை விட, 5 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.