ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இயக்கத்தில், நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்படத்திற்கான 2-வது பாகத்திற்கான பணிகள் குறித்து, ஐசரி கணேஷ்-ம், ஆா்.ஜே.பாலாஜி-யும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசியுள்ளார்களாம்.
அப்போது, சம்பளம் வழங்குவது மட்டுமின்றி, OTT மற்றும் தொலைக்காட்சி உரிமத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று, ஆா்.ஜே.பாலாஜி கேட்டுள்ளாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐசரி கணேஷ், அதற்கு மறுப்பு தெரிவித்தாராம்.
இதன்காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் தான், இவர்களது கூட்டணி தற்போது பிரிந்துவிட்டது என்று, சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கிறார்கள்.