Connect with us

Raj News Tamil

அனிமல் படத்தை கழுவி ஊற்றிய ஆர்.ஜே.பாலாஜி!

சினிமா

அனிமல் படத்தை கழுவி ஊற்றிய ஆர்.ஜே.பாலாஜி!

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் இயக்குநர் சந்தீப் வாங்கா ரெட்டி. இந்த படத்திற்கு பிறகு, இவர் இயக்கியுள்ள திரைப்படம் தான் அனிமல்.

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தில், பெண்களுக்கு எதிரான காட்சிகள் அதிகம் இருந்ததாக கூறப்பட்டது.

இதனைக் கண்டித்து, ஒரு சிலர் தங்களது கருத்துக்களையும் கூறி வந்தனர். இந்நிலையில், இப்படம் குறித்து, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், “நான் இப்போது வரை அனிமல் திரைப்படத்தை பார்க்கவில்லை. அந்த படத்தில் பெண்களை துன்புறுத்துவது போன்ற காட்சிகள் அதிகம் உள்ளது என்று கேள்விப்பட்டேன்.

இதுமட்டுமின்றி, ஷீ-வை நக்க வற்புறுத்துவது போன்ற காட்சி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், “நான் என்னுடைய படத்தில், இதுமாதிரியான காட்சிகளை நிச்சயம் வைக்க மாட்டேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top