ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தை, ஆர்.ஜே.பாலாஜியே தான் இயக்கவும் செய்திருந்தார்.
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ஆனால், இதனை ஆர்.ஜே.பாலாஜிக்கு பதில், சுந்தர் சி இயக்கி வருகிறார்.
இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2-ஐ இயக்காதது ஏன் என்று, அவரிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த அவர், “2-ஆம் பாகத்திற்கான ஐடியா எதுவும் என்னிடம் இல்லை. நான் வேறு கதைகளில் தான் கவனம் செலுத்தினேன். தற்போது, என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய சுந்தர் சியே இந்த படத்தை இயக்குகிறார்” என்று கூறினார்.