ஆருத்ரா பண மோசடியை தொடர்ந்து மேலும் ஒரு பண மோசடியில் சிக்கிய ஆர்.கே சுரேஷ்..!!

திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட எல்பின் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 1,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை எல்பின் நிதி நிறுவன மேலாண் இயக்குனரும் பாஜக நிர்வாகியுமான அழகர்சாமி ராஜாவை கைது விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவருக்கும் நடிகரும், திரைப்பட விநியோகித்தருமான ஆர்.கே சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே சுரேஷ் ஏற்கனவே ஆருத்ரா பண மோசடி வழக்கில் சிக்கியதால் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். தன் காரணமாக அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது எல்வின் நிறுவன நிதி மோசடி வழக்கிலும் ஆர்.கே சுரேஷ் ஆஜராக கோரி திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே சுரேஷ் பல்வேறு நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News