இதற்காகத்தான் தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் – ஆளுநர் விளக்கம்

கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும்” என பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதுதொடர்பாக ஆளுநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் தமிழ்நாடு என்று இருக்கவில்லை. எனவே தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன் என அவர் கூறினார்.

என்னுடைய பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News