நள்ளிரவில் துணிக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளை. சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை தண்டையார்பேட்டை சால்ட் லைன் தெருவில் நிஜாம் முகைதீன் 22 என்பவர் ஒரு ஆண்டுகளாக துணிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் வழக்கம்போல் இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.

நள்ளிரவில் துணிக்கடையில் மர்ம நபர்கள் இரண்டு பேர் பூட்டு, ஷட்டர் மற்றும் கண்ணாடி கதவை உடைத்து துணிகளை கொள்ளையடித்து சென்றனர். அருகில் இருந்த மூன்று கேமராக்கள் உடைத்து தப்பிச்சென்ற நிலையில் கதவு உடைக்கும் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆர்கே நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.