தாம்பரம் அருகே ஐடி.ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..!

தாம்பரம் அருகே ஐடி.ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை,ரொக்க பணம் வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் பார்வதி நகரை சேர்ந்தவர் வினோத் (35). இவர் தரமணியில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 1ம் தேதி தனது குடும்பத்துடன் காரைக்கால் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பிய போது விட்டின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கபட்டிருந்த 11 சவரன் தங்க நகை, ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணம், 250 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்தி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது. இதையடுத்து கை ரேகை நிபுணர்களுடன் போலீசார் தடயங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News