நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

திருவள்ளூர் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 15 சவரன் அடகு நகைளை அடையாளம் தொயாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் பஜார் பகுதியில் விமல் என்பவர் நகைக்கடையும், அடகுக்கடையும் நடத்தி வருகிறார்.

வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் விமல் கடையை பூட்டிச் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை கடைக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், இன்று வழக்கம்போல் கடையை திறக்க விமல் வந்துள்ளார்.

அப்போது, கடையின் ஷட்டர் திறந்து கடப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர், கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, 15 சவரன் அடகு நகைக்கள் மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுதொடர்பாக விமல் அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை 2 மணியளவில் நகைக்கடையின் ஷட்டரை உடைத்த நான்குபேர் உள்ளே இருந்த நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய மீஞ்சூர் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.