17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது இந்தியா. பிரிட்ஜ்டவுனில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில், 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது இந்தியா.
இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்த கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
பின்னர் கோலி பேசியதாவது, எதை அடைய வேண்டும் என நினைத்தோமோ அதை அடைந்துள்ளோம். இதுவே எனது கடைசி டி20 உலகக் கோப்பை என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மா, இந்திய அணிக்காக எனது கடைசி டி20 போட்டி இதுதான். இந்தியாவுக்காக கோப்பையை வென்றுவிட்டு ஓய்வை தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது வென்றுவிட்டேன். குட்பை சொல்லும் நேரம் இது. ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்தார்.