ரோஜா மகளுடன் Romance செய்யும் துருவ் விக்ரம்!

ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ரோஜா. இயக்குநர் ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ள இவர், ஒரு மகள் மற்றும் மகனுடன் ஆந்திராவில் வசித்து வருகிறார்.

தாயை போலவே ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகாவிற்கும், சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அன்ஷூ மாலிகா தமிழ்த் திரையுலகில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க உள்ள திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக ரோஜாவின் மகள் நடிக்க இருக்கிறாராம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர் அன்ஷூவை கதாநாயகியாக நடிக்க வைக்க தன்னிடம் அணுகியதாக ரோஜா கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.