Connect with us

Raj News Tamil

கைதி 2 வில் இணையும் ரோலெக்ஸ்..?

சினிமா

கைதி 2 வில் இணையும் ரோலெக்ஸ்..?

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கைதி திரைப்படத்தில் டில்லி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி தனது யதார்த்தமான நடிப்பால் அசத்தியிருப்பார்.

இந்நிலையில் கைதி 2 வை பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்கு பிறகு இந்த படத்தை இயக்குவார் என்றும் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவும் கார்த்திக்குடன் இணைந்து இந்த படத்தில் நடிப்பார் என்றும் படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா,கார்த்தி இணைந்து நடிக்க இருப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

More in சினிமா

To Top