கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பியாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் தனது வீட்டில் பணிபுரிந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சமீபத்தில் பரபரப்பு புகார் எழுந்தது.
மேலும், இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறப்பு புலணாய்வு பிரிவு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
ஆனால், அதற்குள் பிரஜ்வல் ரேவண்ணா, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, பிரஜ்வல் ரேவண்ணாவை, சிறப்பு புலணாய்வு பிரிவு கைது செய்திருந்தது.
மேலும், மருத்துவ பரிசோதனைக்காக, பவுரிங் மற்றும் பெண் குர்சான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து, நீதிபதி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, பிரஜ்வல் ரேவண்ணாவின் பெயர் மற்றும் இதர விவரங்களை, அவரிடம் நீதிபதி கேட்டார்.
இதனையடுத்து பேசிய பிரஜ்வல், “சிறப்பு புலணாய்வு அணியின் கஸ்டடியில் தான், நான் தற்போது இருக்கிறேன். ஆனால், அவர்கள் என்னை வைத்திருக்கும் அறையும், கழிவறையும் சுத்தமாக இல்லை” என்று கூறினார்.
இதனையடுத்து, அதிகாரிகள் ஏதாவது தாக்குதல் நடத்தினார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, “அவர்கள் எதுவும் செய்யவில்லை. அறையும், கழிவறையும் மட்டும் தான் சுத்தமாக இல்லை” என்று அவர் தெரிவித்தார்.