மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை!

பழனி முருகன் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை, 44 நாட்களுக்கு பிறகு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில், பக்தர்கள் மலை ஏறுவதற்காக, ரோப் கார் வசதி உள்ளது. பராமரிப்பு பணியின் காரணமாக, கடந்த 44 நாட்களாக, இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப் கார் சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த பக்தர்கள், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News