Connect with us

Raj News Tamil

அமெரிக்காவின் புதிய வரி இந்தியாவில்.. காங்கிரஸ் கட்சிக்கு வந்த புது சிக்கல்.. சர்ச்சையை லாவகமாக பயன்படுத்திய பாஜக..

இந்தியா

அமெரிக்காவின் புதிய வரி இந்தியாவில்.. காங்கிரஸ் கட்சிக்கு வந்த புது சிக்கல்.. சர்ச்சையை லாவகமாக பயன்படுத்திய பாஜக..

வளங்கள் பகிர்ந்து அளிக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக, பெரும் அரசியல் போர் நடந்து வருகிறது. இந்த சமயத்தில், காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு தலைவர் சாம் பிட்ரோடா, அமெரிக்காவில் பின்பற்றப்படும் inheritance tax குறித்து பேசியுள்ளார்.

இவரது இந்த கருத்துக்கு, பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் அதே வேளையில், காங்கிரஸ் கட்சியும், அவரது கருத்தில் இருந்து தற்போது தள்ளி நின்றுள்ளது.

அதாவது, ஏ.என்.ஐ என்ற செய்தி ஊடகத்திற்கு, சாம் பிட்ரோடா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், நாட்டின் வளங்களை பிரித்துக் கொடுப்பது என்ற கொள்கை, பொதுமக்கள் நலன் கருதி கொண்டுவரப்பட உள்ளது. பணக்காரர்களின் நலன் கருதி கொண்டுவரப்படவில்லை என்று கூறினார்.

மேலும், அமெரிக்காவின் சில மாகாணங்களில் பின்பற்றப்பட்டு வரும் inheritance tax குறித்து பேசிய அவர், “100 மில்லியன் டாலர் வைத்துள்ள ஒரு நபர் உயிரிழந்தால், அவரது குழந்தைகளுக்கு 45 சதவீத சொத்துக்கள் மட்டும் தான் கிடைக்கும்.

மீதமுள்ள 55 சதவீத சொத்துக்கள் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்படும். இது ஒரு சுவாரசியமான சட்டம். இந்த சட்டம் என்ன சொல்கிறது என்றால், நீ சொத்து உருவாக்கினாய்.

இப்போது நீ உலகத்தில் இருந்து செல்ல உள்ளாய். எனவே, நீ உன்னுடைய சொத்தை மக்களுக்காக விட்டு செல்ல வேண்டும். எல்லாவற்றையும் கிடையாது. பாதியை மட்டும் தான்.. இந்த சட்டம் எனக்கு பிடித்துள்ளது.

இந்தியாவில் அந்த சட்டம் கிடையாது. இப்போது, 10 பில்லியன் சொத்து வைத்துள்ள ஒருவர் உயிரிழந்தால், அவர்களது குழந்தைகள் 10 பில்லியனை பெற்றுக் கொள்வார்கள். ஆனால், பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது. எனவே, இதுமாதிரியான விஷயங்கள் குறித்து, பொதுமக்கள் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

“இன்றைய காலகட்டங்களில், பணக்காரர்கள் தங்களிடம் வேலைபார்க்கும் வேலையாட்களுக்கு தேவையான பணத்தை கொடுப்பதில்லை. ஆனால், அந்த பணத்தை துபாய் மற்றும் லண்டனுக்கு சுற்றலா செல்ல அவர்கள் பயன்படுத்துகின்றனர்” என்று கடுமையாக சாடியிருந்தார்.

inheritance tax இந்தியாவில் கொண்டுவரப்படுவது குறித்து, பாஜகவினர், தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதாவது, பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில், தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது, பணம், சொத்து, உடமைகள் ஆகியவற்றை இழப்பதற்கு சமமாகும் என்றும், வாக்காளர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.. சொத்துக்களை பறித்துக் கொள்பவர்கள் இங்கு தான் உள்ளார்கள் என்றும், விமர்சித்துள்ளார்.

மேலும், பாஜவின் ஷெசாத் பூனவல்லா, “காங்கிரஸ் கட்சி நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த சொத்தை, எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறது” என்று கூறியுள்ளார். “முரண்பாடாக, காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் மருமகன்களுக்கு, மிகப்பெரிய புதையலை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உங்களது பணத்தை எடுத்துக் கொள்ள நினைக்கிறார்கள்” என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

சாம் பிட்ரோடாவின் inheritance tax குறித்து, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ், கருத்து தெரிவித்திருந்தார். அதில், “சாம் பிட்ரோடா தனது சொந்தக் கருத்துக்களை தான் கூறியிருந்தார். நிச்சயமாக, ஜனநாயகத்தில், தனிப்பட்ட நபர் தனது கருத்தை, விவாதிக்க, வெளிப்படுத்த உரிமை உள்ளது” என்று கூறினார்.

“சாம் பிட்ரோடாவின் கருத்தை பரபரப்பாக்கி, பிரதமர் நரேந்திர மோடியின் விஷத்தனமான தேர்தல் பரப்புரைகளை திசை திருப்ப வேண்டுமென்றே முயற்சி செய்கிறீர்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது.” என்றும் அவர் கூறியிருந்தார்.

More in இந்தியா

To Top