சோலையூர் அருகே, பிரபல ரவுடியை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியை சேர்ந்தவர் லோக நாதன். 35 வயதாகும் இவர், பிரபல ரவுடி என்று கூறப்படுகிறது.
இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், லோக நாதன் தாழம்பூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.