இந்தியாவில் மோட்டார் சைக்கில் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபில்டு விற்பனையில் கொடிகட்டிபறந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த நிறுவனம் புதிய வடிவில் ,மலிவான விலையில் தனது மற்றொரு மாடலான ராயல் என்ஃபில்டு ஹண்டர் 350 அறிமுகபடுத்தவுள்ளது. மேலும் இந்த புதிய மாடல் மற்ற ராயல் என்ஃபில்டு பைக்குகளை விட மலிவான விலையில் விற்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் இதன் எஞ்சின் ராயல் என்ஃபில்டு கிளாசிக் 350 cc போன்று வடிவைக்கொண்டது. இதை தவிர்த்து அதன் வடிவம் முற்றிலும் மற்ற ராயல் என்ஃபில்டு போன்று இருக்காது எனக் கூறப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 1.47 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கபட்டுள்ளது.
மேலும் இது 6,100 rpm-ல் 20.2HP பவரையும், அதிகபட்சமாக 4,000 rpm-ல் 27 N-m torque-யும் உருவாக்குகிறது. இந்த பைக் 90`s கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல அந்த காலத்து தாத்தா-வில் இருந்து இந்த காலத்து 2k கிட்ஸ் வரை favorite பைக்-காக திகழ்கிறது. அந்த வகையில் ராயல் என்ஃபில்டு ஹண்டர் 350 வெளிவருவது ராயல் என்ஃபில்டு பிரியர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.