ஆஸ்கார் இறுதிச்சுற்றுக்கு சென்ற ஆர்.ஆர்.ஆர்..!

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜ மெளலி. வரலாற்று கதைகளை தேர்ந்தெடுக்கும் இவர், கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இதில் தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்தனர். இந்த நிலையில் சினிமாத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதில் இடம்பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.