இந்தியா
பரிசாக கிடைத்த ரூ.25 கோடி.. பரிதாப நிலைக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர்!
கேரள அரசின் சார்பில், ஓணம் பண்டிகையையொட்டி, லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இதன் குலுக்கல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், இதில், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனுப்பிற்கு, ரூ.25 கோடி முதல் பரிசாக கிடைத்துள்ளது.

காலையில் ஆட்டோ ஓட்டுநராக இருந்துவிட்டு, மாலையில் கோடீஸ்வரராக மாறிய இவருக்கு, பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். ஆரம்பத்தில் பெரும் சந்தோஷத்தில் இருந்த அனுப், நாட்கள் செல்ல செல்ல பெரும் சங்கடத்தில் சிக்கியுள்ளார்.
அதாவது, ரூ.25 கோடி பரிசாக பெற்ற நாட்களில் இருந்து, மருந்து செலவுக்கு உதவுங்கள் என்றும், தொண்டு நிறுவனங்களுக்கு உதவுங்கள் என்றும் பலரும் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று, பணம் கேட்டு மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அனுப், வீட்டை பூட்டிவிட்டு, தனது சகோதரியின் வீட்டில் தலைமறைவாக இருந்து வருகிறாராம்.
