தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால், ஸ்வீட்ஸ், தயிர், லஸ்சி, ஐஸ் கிரீம் உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. திமுக அரசு பதவி ஏற்றது முதல் இன்று வரை மூன்று முறை விலையை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் ரூ.580 இருந்து ஒரு லிட்டர் நெய் விலை ரூ.50 உயர்த்தி ரூ.630 விற்பனை செய்யப்படுகிறது.
கிறிஸ்துமஸ், பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்கள் வருவதை தொடர்ந்து, நெய் விலை உயர்த்தி இருப்பது பொது மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.