Connect with us

Raj News Tamil

வருங்கால மனைவிக்கு ரூ 564 கோடி சொகுசு பங்களா! மாஸ் காட்டிய அமேசான் நிருவனர்!

உலகம்

வருங்கால மனைவிக்கு ரூ 564 கோடி சொகுசு பங்களா! மாஸ் காட்டிய அமேசான் நிருவனர்!

உலக பணக்காரர்களில் அமேசான் நிறுவன தலைவரான ஜெப் பெசோஸ் 3-வது இடத்தில் உள்ளார்.இவர் தனது மனைவி மெக்கென்சி ஸ்காட்டை கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் லாரன் சான்செஸ் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில் , ஜெப் பெசோஸ் தனது வருங்கால மனைவிக்காக சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் இந்தியன் க்ரீக் தீவில் உள்ள பங்களாவை ரூ.564 கோடிக்கு வாங்கினார். 1965-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பங்களா 1985-ம் ஆண்டு விரிவுப் படுத்தப்பட்டது. இது 2.8 ஏக்கர் நிலப்பரப்பில் 9259 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. 3 படுக்கை அறைகளும், 3 குளியல் அறைகளும் கொண்ட இந்த பங்களாவில் சொகுசு வசதிகள் உள்ளன.

மேலும் பங்களாவை புதுப்பித்து புதிய பிரம்மாண்ட மாளிகையை ஜெப் பெசோஸ் உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. சில மாதங்களுக்கு முன்பு லாரன் சான்செசுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை வழங்கி காதலை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top