சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் சுதர்சன் நகர் பகுதியை சேர்ந்தவர் திருமலைநாதன் (60). நேற்று மாலை ராஜகீழ்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியில் ரூபாய் என்பதாயிரம் பணத்தை எடுத்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் பணப்பையை வைத்து விட்டு வீட்டின் அருகே உள்ள சலவை (Ironing Shop) செய்யும் கடையில் பேசி கொண்டிருந்த போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவரில் ஒருவர் முதியவரிடம் சாலையில் கிடக்கும் பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகள் உங்களுடையதா என்று கவனத்தை திசை திருப்பி பேச்சு கொடுத்தவாறு இருந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் தயராக இருந்த மற்றொரு நபர் முதியவர் இருசக்கர வாகனத்தில் இருந்த பணப்பையை எடுத்து கொண்டு இருவரும் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முதியவர் உடனடியாக சேலையூர் காவல் நிலையத்தில் புகாத் அளித்தார்.
சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் மர்ம நபர்கள் சாலையில் சில ரூபாய் நோட்டுகளை சிதறிவிட்டு முதயவரின் கவணத்தை திசை திருப்பி கொள்ளையடித்தது தெரியவந்ததை தொடர்ந்து மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்,
பட்டபகலில் நடைபெற்ற இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.