பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சமீபத்தில் மீடியாவுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அந்த பேட்டியில், “பாஜக மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. RSS தேவையில்லை என்ற இடத்திற்கு, அதே முன்னேறி விட்டது. தங்களது சொந்த பிரச்சனைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கான தகுதி, பாஜகவுக்கு வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
மேலும், சித்தாந்த அடிப்படையில் RSS பணியாற்றி வருகிறது. ஆனால், பாஜக அரசியல் அமைப்பாக செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில், RSS-யின் கிழக்கு பிராந்திய பணியாளர்களின் வளர்ச்சிக்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட தலைவர் மோகன் பகவத், இயக்கத்தை சேர்ந்தவர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார்.
அப்போது, ஜே.பி.நட்டாவின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அந்த மாதிரியான கருத்துகளை கவனிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை” என்று கூறினார்.
மேலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உரிமை உன்டு. ஜே.பி.நட்டாவின் கருத்து, அமைப்பின் கொள்கையோடோ அல்லது கட்சியின் கொள்கையோடோ தொடர்புடையது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், எந்தவொரு விஷயத்திற்கும் திசை திரும்பாமல், அமைப்பின் நோக்கத்தை நோக்கி தொடர்ச்சியாக பணியாற்றுவதன் அவசியம் குறித்து, அவர் எடுத்துரைத்தார்.