இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், பொதுமக்களுக்கு பயன் உள்ள பல்வேறு சட்டங்கள் உள்ளன. அந்த சட்டங்கள் அனைத்தும், பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில், சரியாக பயன்பட்டுக் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில், அரசாங்கத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரியும் வகையில் நடத்துவதற்காக, தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தின் மூலம், அரசின் திட்டங்கள் தொடர்பான தகவல்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டு, இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இவ்வாறு இருக்க, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“ஆர்.டி.ஐ திட்டம் அமல்படுத்தப்பட்டு, இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த திட்டம், கடந்த 2014-ஆம் ஆண்டு வரை, பல நல்ல மாற்றங்களை பெற்றிருந்தது.
ஆனால், அதன்பிறகு மோடி தலைமையிலான ஆட்சி, இந்த திட்டத்தை தொடர்ந்து பலவீனமாக மாற்றியுள்ளது.
மேலும், இந்த திட்டத்தின் தன்மையை நீர்த்துப்போக செய்துள்ளது.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பதிவிட்ட ஜெய்ராம் ரமேஷ், “மோடியின் ஆட்சியில், RTI சட்டம் RIP என்ற நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது” என்றும் கூறினார்.