ஒடிசா ரயில் விபத்து குறித்து மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வதந்தி பரப்பிய கன்னியாகுமரி தக்கலையைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர் செந்தில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியின் ரயில் மேலாளர் ஒரு இஸ்லாமியர் என்றும் அவர் தப்பித்து ஓடி விட்டார் என்றும் பழைய புகைப்படத்தை எடுத்து ட்விட்டரில் வதந்தி பரப்பினார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.