ரஷ்யாவும், உக்ரைனும் 190 போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்டன.
ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது பிப்ரவரி 24, 2022 தாக்குதலைத் தொடங்கியது. இதைதொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா, உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், 95 உக்ரைன் போர்க் கைதிகள் அவர்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷ்யா போர்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனர் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.