பயங்கரவாத அமைப்பாக மாறிய Facebook நிறுவனம்!

ரஷ்யாவிற்கும், உக்ரைன் நாட்டிற்கும் இடையே கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை, ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இருப்பினும், தங்களால் முடிந்த தாக்கத்தை, உக்ரைன் ராணுவமும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும், உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்க அரசின் ஆதரவும் உள்ளது. போரை தொடர்ந்து நடந்துவதற்கு பண பலத்தையும், ஆயுத பலத்தையும், அந்நாட்டு அரசு கொடுத்து உதவுவதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் செய்திகளை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அமெரிக்கா நிறுவனங்கள் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அந்த சமூக வலைதள நிறுவனங்களுக்கு ரஷ்ய அரசு தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த மாஸ்கோ நீதிமன்றம், மெட்டாவின் வாதத்தை நிராகரித்தது.

மேலும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை உள்ளடக்கிய மெட்டாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா சேர்த்துள்ளது.