விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள நாடு ரஷ்யா. இந்நிலையில் நிலவை ஆராய்வதற்காக “லூனா-65” என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த 1967-ம் ஆண்டு லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா அனுப்பியது.
இது வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் பூமிக்கு திரும்பியது. இந்நிலையில் நிலவுக்கு மற்றொரு விண்கலமான லூனா-65 ஐ இன்று ரஷ்யா 2.1பி என்ற ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது. இது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைய 5 நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்றும் பின்னர் நிலவில் தரையிறங்குவதற்கு 5 முதல் 7 நாட்கள் வரை பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலமும் ரஷியாவின் லூனா-25 விண்கலமும் ஒரே நாளில் தரையிறங்கும் என்று கூறப்படுகிறது. இதற்காகவே மூன்று இடங்களை தேர்வு செய்துள்ளனர் ரஷ்ய விஞ்ஞானிகள்.
ரஷியா கடந்த 1976-ம் ஆண்டிற்கு பின் 47 ஆண்டுககுளுக்கு பிறகு தற்போது விண்கலத்தை அனுப்ப உள்ளது. நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று லூனா-25 ஆய்வு செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது.