ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் நடிகை கமில்லா. 24 வயதான இவர், தாய்லாந்து நாட்டில் உள்ள கோ சாமூய் பகுதிக்கு, தனது காதலருடன் சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள கடற்கரை ஒன்றின் ஓரமாக அமர்ந்துக் கொண்டு, யோகா செய்துள்ளார்.
அந்த சமயத்தில் திடீரென வந்த பெரிய அலை, கமில்லாவை, கடலின் உள்ளே இழுத்துச் சென்றுள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், கமில்லாவை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோ சாமூய் பகுதியை தனது வீடு என்றும், உலகத்திலேயே சிறந்த இடம் என்றும் கமில்லா கூறியிருந்த நிலையில், அந்த இடத்திலேயே அவரது உயிர் பிரிந்த சம்பவம், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.