வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய Passport Officer! இணையத்தில் வைரல்!

வெளிநாட்டை சேர்ந்த மக்கள், இந்தியாவிற்கு வரும்போது, மிகவும் கன்னியமாக நடத்தப்படுகிறார்கள். ஆனால், ஒருசில சமயங்களில், சமூக விரோதிகளால், இந்தியர்களின் மானம் கப்பலில் ஏற்றப்படுகிறது.

சமீபத்தில் கூட, ஸ்பானிஷ் – பிரேசில் நாட்டை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம், இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தார். இந்த சம்பவம், இந்தியர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது, ரஷ்யா நாட்டை சேர்ந்த தினாரா என்ற பெண், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 80 ஆயிரம் ஃபாலோவர்களை வைத்துள்ளார். உலகம் முழுவதும் பயணம் செய்து, அதனை வீடியோவாக வெளியிடும் இந்த பெண், இந்தியாவை அதிகம் நேசிக்கும் நபராகவும் உள்ளார்.

இவர், தற்போது இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டெல்லி விமான நிலையத்தில், பாஸ்போர்ட்டை ஆய்வு செய்யும் அதிகாரி ஒருவர், ‘அடுத்த முறை இந்தியா வந்தால், எனக்கு செல்போனில் அழைப்பு விடுங்கள்’ என்று கூறியதாகவும், அந்த அதிகாரி தன்னுடைய செல்போன் நம்பரை, டிக்கெட்டில் எழுதிக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், இவரது இந்த செயல்பாடு சரியானதா? என்ற கேள்வியை முன்வைத்து, அந்த வீடியோவுக்கு அவர் கேப்ஷனும் வழங்கியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பெரும்பாலான நெட்டிசன்கள், இது மிகவும் தவறான செயல்பாடு என்றும், அந்த அதிகாரி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூறி வருகின்றனர். ஒரு சிலர், அவருக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News