அஜித்தை காப்பி அடிக்கும் விஜய் தந்தை!

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், உருவாகி வரும் திரைப்படம் துணிவு. இந்த படத்தின் ஷீட்டிங்கை முடித்துள்ள அஜித், தான் செல்ல விரும்பும் இடங்களுக்கு சுதந்திரமாக சென்று வருகிறார்.

இது இவரது நீண்ட நாள் கனவு என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்நிலையில், அஜித்தை போன்றே, தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அதாவது, பைக்கிலேயே இமயமலை வரை எஸ்.ஏ.சந்திரசேகர் சென்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அஜித்தை போலவே விஜயின் தந்தையும், உலகத்தை சுற்றி வருகிறார் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.