சித்திரை ஆட்டத் திருநாளான இன்று, சபரிமலை கோவிலின் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது.
மண்டல பூஜையின் போது சுவாமிக்கு அணிவிக்கப்படும் 426 பவுன் தங்க அங்கியானது, மறைந்த திருவிதாங்கூா் மன்னரால் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கபட்டது. இதனால் ஒவ்வொரு வருடமும் இவரது பிறந்தநாளான ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகளுடன் தங்க அங்கியும் அணிவிக்கப்படும். இந்த விழாவே சித்திரை ஆட்டத் திருவிழா.
இந்நிலையில், நடப்பாண்டின் சித்திரை ஆட்டத் திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நாளை சிறப்பு அபிஷேகத்தின் போது, ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படவுள்ளது. புஷ்பாபிஷேகம், படி பூஜை முடிந்து இரவு 10.30 மணி அளவில் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.