ஜான் மகேந்திரன் இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் சச்சின்.
இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி 20 வருடங்கள் நிறைவு செய்ததையொட்டி, தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும், மிகப்பெரிய வரவேற்பை இந்த திரைப்படத்திற்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது, அதன்படி, இந்த திரைப்படம் இதுவரை 10 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம்.
முதன்முறையாக படம் ரிலீஸ் ஆனபோது வசூலித்த தொகையின் அளவுக்கு, தற்போதும் படம் வசூலித்திருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.