தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு நாளும் அசுர வளர்ச்சியை பெற்று வருகின்றன. இந்த வளர்ச்சியால், ஒரு பக்கம் நன்மை கிடைத்தாலும், ஒருசில நேரங்களில் கெடுதலும் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு வளர்ச்சி அடைந்த தொழில் நுட்பங்களில், AI மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. இது எந்த அளவிற்கு ஆபத்தானது என்றால், ஒரு இறந்துபோன நடிகரை கூட, சினிமாவில் தத்ரூபமாக நடிக்க வைத்துவிட முடியும் என்ற அளவில் உள்ளது.
இந்த AI தொழில்நுட்பத்தால் உருவான நடிகை ராஷ்மிகாவின் DEEP FAKE வீடியோவும், ஆலியா பட்டின் DEEP FAKE வீடியோவும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இந்நிலையில், இந்த பிரச்சனையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சிக்கியுள்ளார். அதாவது, பணம் முதலீடு செய்யும் APP ஒன்றிற்கு, சச்சின் டெண்டுல்கர் விளம்பரம் செய்யும் வீடியோ ஒன்று, இன்று காலை முதல் டிரெண்டாகி வந்தது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலருக்கு, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அந்த வீடியோவை ஆராய்ந்து பார்த்ததில், அது DEEP FAKE வீடியோ என்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அறிந்த சச்சின் டெண்டுல்கர், தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அது ஒரு DEEP FAKE வீடியோ என்றும், அதனை நம்பி யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும், அந்த வீடியோவை அனைவரும் REPORT செய்யுங்கள் என்றும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.