ராமாயணத்தை மையமாக வைத்து, பாலிவுட்டில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. இந்த படத்தில், நடிகை சாய் பல்லவி, சீதையாக நடிக்க உள்ளார்.
இதற்கிடையே, இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதால், அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது என்று சாய் பல்லவி முடிவு எடுத்துள்ளதாக, பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து, நடிகை சாய் பல்லவி, பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், என்னை பற்றிய வதந்திகளை பரப்புவது தொடர்கதையாக உள்ளது என்றும், இதுபோல் பொய்யான செய்திகளை வெளியிட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.