சினிமாவை விட்டு விலகும் சாய் பல்லவி? காரணம் என்ன?

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர், கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில், அடுத்ததாக நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு, சினிமாவில் நடிப்பதை, சாய் பல்லவி தவிர்க்க வாய்ப்பு இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது. அதாவது, மருத்துவ படிப்பை முடிந்துள்ள சாய் பல்லவி, தனது சொந்த ஊரில், மருத்துவமனை ஒன்றை கட்டத்துவங்கியுள்ளாராம்.

அந்த பணிகள் அனைத்தும் முடிந்தபிறகு, முழு நேர மருத்துவராக அவர் மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.