சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், அதிமுக தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் ஆகியோர் ஹிமாச்சல பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு வாடகை கார் ஒன்றில் கடந்த 4-ஆம் தேதி பயணம் செய்தபோது கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கோபிநாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, விபத்தில் சிக்கி காணாமல் போன வெற்றி துரைசாமியைத் தேடும் பணியில் காவல்துறை, ராணுவம், விமானப்படை மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த 9 நாட்களாகத் நடந்த இந்த தேடுதல் வேட்டையில் இன்று விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை மீட்ட மீட்பு படையினர் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.